மனித வாழ்க்கையை – நம்பிக்கை, நலம், கற்றல், உறவுகள், வளர்ச்சி, வேலை, சக்தி, பணம், பகிர்வு மற்றும் புத்துணர்ச்சி ஆகிய – 10 பகுதிகளிலும் வளமாக்க, 40 எளிய கட்டுரைகளை வழங்கும் நூல். எல்லா வயதினரும், எல்லாத் தரப்பினரும் வாசிக்கும் வகையில் இருக்கும் இந்நூல், பரிசளிக்க ஏற்றது..
சூழல் எதுவானாலும், நீங்கள் மகிழ்ச்சியுடன் விளங்க, வழிகாட்டும் நூல்..!
“கேசரி என்றால் கேசரி அல்ல; பூரி என்றால் பூரி அல்ல; ஆனால், மகிழ்ச்சி என்றால் மகிழ்ச்சிதான்..! உண்மையிலேயே மகிழ்ச்சி. எப்படி செய்திகளைச் சொன்னால், அது எடுபடும் என்பதை நன்றாக உணர்ந்து, எல்லோருக்கும் பயனளிக்கும் வகையில், மிக அருமையாக இந்த நூலை எழுதியிருக்கிறார், நண்பர் கவி. முருகபாரதி” – புலவர். சண்முக வடிவேல், பட்டிமன்றப் பேச்சாளர், திருவாரூர்.
பெற்றோர்கள் மற்றும் ஆசிரியர்கள், தங்கள் பிள்ளைகளை உயர்த்துவதற்கு வழிகாட்டும் நூல்..!
“ஒரு சிறந்த புத்தகம் செய்வது என்ன? வாசிக்க வைக்கும்… நேசிக்க வைக்கும்… தொடர்ந்து சுவாசிக்க வைக்கும். அப்படித்தான் இந்நூல். எளிய நடை, முக்கிய கருத்துகளுக்கு வலு சேர்த்தமை, உலக நிகழ்வுகள் சுட்டியுள்ளமை, தனது அனுபவங்களையும் அருமையாகப் பகிர்ந்துள்ளமை சிறப்பு. விருப்பங்களைக் கேளுங்கள், வாய்ப்புக் கொடுங்கள், பொறுப்பை ஏற்படுத்துங்கள் என்கிறார்.” – Rtn. வி. மோகன், ஆசிரியர், தஞ்சாவூர்.
அதிகமாகவும், நன்றாகவும் செய்வதன் மூலம், முன்னேற்றத்தை அடைய வழிகாட்டும் நூல்.
“பல்வேறு ஆளுமைகள், அவர்களுடைய வெற்றிச் சூத்திரங்கள், அதன் சூட்சுமங்கள் என, கனமான கருத்துகளைத் தாங்கியுள்ள, கற்பக விருட்சம் இது. மொழியாளுமை, தர்க்கம், ஹாஸ்யம், ஆகியவற்றைச் சரியான விகிதத்தில் கலந்து தந்துள்ளார். நமக்குள்ளே மறைந்திருக்கும் “Rest of ME?”-யைத் தேடவைக்கும், சின்னத் திரியே, இந்த நூல்..!” – திரு. ‘வெற்றி விடியல்’ ஸ்ரீனிவாசன், நிதி ஆலோசகர், சென்னை.
It is a English Translation of the Self Improvement Book – “More + Rasam = Munnetram”.
“This book provides a veritable feast to the readers. Reader will feel that he has read not one, but a number of books in a short span of time. A good amount of useful information is given in a nutshell. The lively incidents he mentions from his training programs and his thirst for continuous improvement are, indeed, thought-provoking.” – Lion. Prof. Ratna Natarajan, Trainer & Consultant, Vellore.
“இனிய நந்தவனம்” மாத இதழில் வெளிவந்த தொடரின், தொகுப்பு நூல்.
“எண்களின் சிறப்புகளோடு, Business & Management Concept-களைப் பொருத்தி, 10 தலைப்புகளில் இந்நூலை எழுதியிருப்பது, சாலச் சிறந்த ஒன்றாகும். ஒவ்வொன்றும் தனிச் சிறப்புக் கொண்டது. ஒவ்வொரு பகுதியும், நம்மிடம் பேசுவது போலவே இருக்கிறது. கூர்ந்து கவனித்துப் படித்து அறிந்தால், அற்புதமான பலன்களைப் பெறலாம் என்பது திண்ணம்.” – முனைவர். பால சாண்டில்யன், பயிற்றுநர் & தொழில் ஆலோசகர், சென்னை.
தொழில் முனைவோருக்கு வழிகாட்டும் நூல் இது. தொழில்புரியும் அனைவருக்கும் அடிப்படை தேவைகளான “Self, Money & Staff” என்ற மூன்று நிர்வாகத்தையும் திறம்பட சொல்லித் தருகிறது. மூன்று பயிற்றுநர்கள், ஆளுக்கு ஒரு பகுதியை விளக்கி இருக்கிறார்கள். தன்னுடைய பயிற்சிகளால் வளர்ந்த திரு. நந்தகுமாரின் வேண்டுகோளுக்கு இணங்கி, திரு. முருகபாரதி இணைந்து எழுதிய நூல்.
“கவி. முருகபாரதி – கல்வியாளர், பேச்சாளர், பயிற்றுநர், பத்திரிகையாளர், எழுத்தாளர், ஆலோசகர், பதிப்பாளர், மற்றும் சமூக சேவகர் எனப் பன்னீரும் சேரும் கடல். அந்தக் கடலின், இயற்கை வளமான சிந்தனைகளையும், அலைகளால் சேர்த்த பொக்கிஷச் செய்திகளையும், புத்தக அணியாக்கி உங்களிடம் தந்திருக்கிறோம். இதில் உள்ள சுவையான சம்பவங்களை நீங்கள் நேசிப்பீர்கள், தேவையான கருத்துகளை யோசிப்பீர்கள் என நம்புகிறோம்.” – யோசி பதிப்பகம்
“முகில் டிவி”-யில் வழங்கிய தினசரி உரைகளின் தொகுப்பு நூல்.
“சுய முன்னேற்றக் கட்டுரைகளை எழுதுவது எளிது. அது, வாசிப்பவருக்குப் பயன்படும்படி செய்வதுதான் கடினம். இந்த சவாலை, முருகபாரதி அருமையாகக் கையாண்டு, இந்நூலை உருவாக்கியுள்ளார். அனைத்தும் சிறு கட்டுரைகள்தாம். எளிய நடை. வாசிக்கும்போதே, நம் காதுக்குள் அவருடைய குரல் கேட்கிறது. சின்னச் சின்ன பத்திகளில், பெரிய விஷயங்களை, ரசனையோடு சொல்லும் கலை, மகிழ்வளிக்கிறது.” – திரு. என். சொக்கன், எழுத்தாளர், பெங்களூரு.
“வளம்பெற யோசி” மாத இதழில், வெளியான சிந்தனைக் கட்டுரைகளின், தொகுப்பு நூல்.
“படிக்கும் போதே, மனம் புல்லரிக்கிறது. காரணம் – எழுத்தின் வீச்சு. அவரது (முருகபாரதி) எழுத்துகள் வீரியமானவை. விவேகம் மிக்கவை. உண்மையானவை. ஆன்மாவைப் பிழிந்து அக்கறையுடன் எழுதியவை. அவரது எழுத்தில், பயம் தெரியவில்லை; நயம் தெரிகிறது. நேர்மை தெரிகிறது. ஒவ்வொரு கட்டுரையும், ஒவ்வொரு விதத்தில் சிறந்து விளங்குகிறது!” – திரு. மு. முத்துசீனிவாசன், தலைவர், புதுக்கோட்டை இலக்கியப் பேரவை.
பல்வேறு காலகட்டத்தில் எழுதிய கவிதைகளை, சிறப்பு தினங்களின் அடிப்படையில் தொகுத்து வெளியான நூல்.
“உள்ளடக்கம் அதனாலே தலைநிமிர்ந்து / ஒளிவீசும் கவிதைகளால் நடைபயின்று / துள்ளிவரும் பந்தைப்போல் துடிப்பு மிக்க / துநிவுதரும் தன்முனைப்பு எண்ணத்தாலே / அள்ளிவைத்த வானவில்லாய் எழுச்சி கீதம் / ஆஆஹா எனவியக்க இயற்றியுள்ளார்! / வெள்ளிநிலா தாரகைக்குத் தலைமை தாங்கி / விளங்குதல் போல் இவர் எழுத்து வழிநடத்தும்!” – திரு. ‘எதிரொலி’ விசுவநாதன், நிறுவனர், பாரதி – நெல்லையப்பர் மன்றம், சென்னை.
மாணவர்கள் விரும்பிப் படிப்பதற்கும், நினைவாற்றலை வளர்ப்பதற்கும் உத்திகளைத் தரும் நூல்.
“தேர்வில் மட்டுமல்ல; வாழ்விலும் வெல்வது எப்படி என்பதை, பதினைந்து கட்டுரைகளில், பளிச்சென்று விளக்குகிறார். பல பயிற்சிகள் தரும் அனுபவத்தை, பல நூல்கள் வாசித்த அறிவுச் செறிவை, இந்த நூல் வழங்கி விடுகிறது. இந்நூலை, எளிதில் வேகமாக வாசித்து விடலாம். ஆனால், ஆழ்ந்து வாசித்தால், ஒரு கட்டுரைக்குள் ஒரு சிறந்த கருத்து, ஒரு சம்பவம், ஒரு கவிதை, ஒரு அனுபவம், எனக் கலந்திருப்பதைக் காணலாம்.” – கவிஞர். தங்கம் மூர்த்தி, தேசிய நல்லாசிரியர் விருதாளர், புதுக்கோட்டை.